புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது எப்போது?

Update: 2025-07-20 17:36 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறினார்கள். கட்டிடத்தை இடித்து 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை கட்டிடம் கட்டவில்லை. குழந்தைகள் அங்குள்ள மரத்தடியிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

-வே.ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், அடியத்தூர். 

மேலும் செய்திகள்