இணையதள வசதி விரைவாக செயல்படவில்லை

Update: 2022-09-02 11:20 GMT
இணையதள வசதி விரைவாக செயல்படவில்லை
  • whatsapp icon

ஆரணி கோட்டை மைதானம் அருகே குதிரை லாயத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. அங்கு தினமும் 80-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அங்கு கடந்த ஒரு மாதமாக பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவே ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வதற்கான முன்பதிவு டோக்கன் பெற வேண்டும். அனைத்துக் கட்டணமும் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இணையதள வசதி விரைவாக செயல்படவில்லை. மெதுவாக செயல்படுகிறது. விரைவாக செயல்படக்கூடிய இணையதள வசதியை அனைத்துப் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜயபாரதி, ஆரணி.

மேலும் செய்திகள்