அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சி மராட்டிப்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரப்பக்குட்டை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அறிவுரையின் பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் குட்டையை தோண்டும் பணியை மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பணியை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து விட்டனர். நாரப்பக்குட்டையை மீட்டுத்தர அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், மராட்டிப்பாளையம்.