வீணாகும் அரசு கட்டிடங்கள்

Update: 2022-08-28 09:57 GMT

திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே இயங்கி வந்த கட்டிடங்கள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை அலுவலகம் போன்ற கட்டிடங்கள் பூட்டப்பட்டு பயனற்றுப் போகும் நிலை உள்ளது. எனவே நல்ல நிலையில் உள்ள கட்டிடங்கள் வீணாகாமல் வேறு அலுவலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பிரணவ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்