கடந்த 6 மாத காலத்தில் கோவில்களில், பொது நிகழ்ச்சிகளில் கம்பி இணைப்பு உள்ள ஒலி பெருக்கி பயன்படுத்தும்போது மின்சாரம் தாக்கி பலர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கம்பி இல்லா ஒலி பெருக்கி கருவியை பள்ளிகள், கல்லூரிகள், மேடை நிகழ்ச்சிகள், கோவில்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையே தொடர்ந்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அகால மரணங்கள் நடப்பதை தடுக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அரிமா ஆர்.குப்புராஜ், வேலூர்.