திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஆண்டு கணக்கில் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது. எனவே உடடியாக கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-நாசர், தூசி.