திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2023-07-12 17:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை அடுத்த தென்நந்தியாலம் ஆதிதிராவிடர் காலனியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். அந்தச் சுகாதார வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுச் சுகதாதார வளாகத்தை திறக்க முன் வரவேண்டும்.

-க.கவுதம், தென்நந்தியாலம். 

மேலும் செய்திகள்