ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

Update: 2025-05-04 19:53 GMT

போளூர் தாலுகா களம்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் பல்வேறு காரணத்துக்காக பலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, நோயாளிகளுக்குப் போதிய குடிநீர் வசதி இல்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை. நோயாளிகள் மின்சாரம் இன்றி அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் போதிய வசதிகளை செய்து கொடுக்குமா?

-இளஞ்சேரன், களம்பூர்.

மேலும் செய்திகள்