பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-08-08 10:58 GMT

பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா பூண்டி ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 230 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளிக்கு புதிய அரசு கட்டிடம் கட்டிக் கொடுத்தாலும், போதிய இட வசதி இல்லை. கழிவறை, குடிநீர், மின்விளக்கு போன்ற வசதிகள் இல்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

பொதுமக்கள், பூண்டி

மேலும் செய்திகள்