ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பொன்னியம்மன் கோவில் எதிரே பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளம் சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது. அதனால் குளத்திலிருந்து குடிக்கவும், கோவில் பூஜைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது இந்த குளம பராமரிப்பின்றி, பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.