ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும்

Update: 2025-09-07 18:14 GMT

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம் ஊராட்சியில் அரசின் திட்டங்கள், சேவைகள் என்னென்ன உள்ளது? எனத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்களுக்கு எழும் சந்தேகங்களை ஊராட்சி செயலாளரிடம் கேட்க சென்றால், அவர் சரியான விளக்கம் அளிப்பது கிடையாது. மேலும் மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசியும் அவமானம் செய்கிறார். இதுபோன்ற நபர்களால் உண்மையான பயனாளிகள் பயன்பெற முடியுமா? எனத் தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை பணி மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தராஜ், புலிவலம்.

மேலும் செய்திகள்