ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் அரசு நூல் நிலையம் உள்ளது. அங்கு 32 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 2500 வாசகர்கள் உள்ளனர். அந்தக் கட்டிடம் பழமையானதாகும். தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து புத்தகங்களை படிக்கிறார்கள். கட்டிடத்தின் மேல் பகுதி பல இடங்களில் சேதம் அடைந்தும், விரிசல் ஏற்பட்டும் உள்ளது. மழைப் பெய்தால் உள்ளே நீர் கசிவு உள்ளது. நூல் நிலைய கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெற்றிவேல், கலவை.