காட்சி பொருளான கிராம சேவை மைய கட்டிடம்

Update: 2022-07-14 18:36 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மெய்யூர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்தும், அது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதற்கும் ஏதுவாக ரூ.15 லட்சம் மதிப்பில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலைக்கு செல்லும் அருகில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அது, கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்தக் கட்டிடத்தை வெறும் காட்சி பொருளாகவே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ேவண்டும்.

-நாதன், மெய்யூர்.

மேலும் செய்திகள்

மயான வசதி