சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரி கடை வாசல் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை 2021-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உடைந்து சேதமானது. இந்த தடுப்பணை கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்தத் தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும்.
-விஜயன், சோளிங்கர்.