திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் வடநாங்கூர் கிராமத்தில் சாலையையொட்டி ஏரிக்கால்வாய் உள்ளது. அதில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. அந்த ஏரிக்கால்வாயை 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வார வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சி.அசோக், தென்னாங்கூர்.