வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி உள்ளது. அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்குள்ள கழிவறை, குளியல் அறைகளில் கதவுகள் இல்லை. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகா், அணைக்கட்டு.