திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கமிட்டி அருகில் உள்ள புளியமரம் பட்டுப்போய் ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. சமீப காலமாக மரத்தில் இருந்து காய்ந்த சிறு சிறு மரக்கிளைகள் குரங்குகளின் நடமாட்டத்தால் கீழே உடைந்து விழுகிறது. இந்த மரத்தின் கீழே தான் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பஸ்சுக்காகக் காத்திருக்கின்றனர். மேலும் பெரிய கிளைகள் எப்போது வேண்டுமானாலும் விழலாம். பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீ.மணிவண்ணன், வேட்டவலம்.