அரக்கோணம் தாலுகா மாங்காட்டு சேரி காலனியில் யாரேனும் உயிரிழந்தால் அவரின் பிணத்தை சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல போதிய பாதை வசதி இல்லை. கிராமத்தையொட்டி உள்ள தனியார் விவசாய நிலங்களில் நெற்பயிரை மிதித்துக் கொண்டு பாடையில் வைத்த பிணத்தைத் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறையில் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சுடுகாட்டுக்கு பாதை வசதி செய்து தருவார்களா?
-பொதுமக்கள், மாங்காட்டு சேரி.