கலசபாக்கம் அருகில் உள்ள ந.பி.தேவனந்தல் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால் உடலை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய போதிய பாதை வசதி இல்லை. நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயல் வெளிக்கு நடுவே உள்ள வரப்பில் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு மயான பாதை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், ந.பி.தேவனந்தல்.