ஆரணிப்பாளையம்-புதுகாமூர் செல்லும் சாலையில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாய் முறையாக இல்லாததால் பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. அங்கு ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்ல கால்வாயை தூர்வாரி வழிவகை செய்ய வேண்டும்.
-வேதாசலம், ஆரணி.