பேரணாம்பட்டு தி.ரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் இருந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சேதமான மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து அதில் மின்விளக்கும் பொருத்தி உள்ளனர்.
இதனால் அந்தப்பகுதி வெளிச்சம் நிறைந்து காணப்படுகிறது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.