ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதக்கா- கட்டேரி பகுதியை இணைக்கும் ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டார். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஜமுனா இளவரசன், ஊராட்சி மன்ற தலைவர்.