வேலூர் மாநகருக்கு தேவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகம்

Update: 2022-09-08 09:45 GMT

ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கும், மருத்துவச் சுற்றுலாவுக்கும் அதிக அளவில் வருவாய் வாய்ப்புகள் உள்ளது. இம்மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற தங்கக் கோவில், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மருத்துவ மனை, வி.ஐ.டி, ஏலகிரி, ஜலகண்டேஸ்வரர் கோவில் என எண்ணற்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களும் உள்ளன. காட்பாடி ரெயில் நிலையத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் பயணிகள் வரை காட்பாடி நிலையத்துக்கு 24 மணி நேரமும் வந்து செல்கின்றனர். உலகெங்கிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக வரும் மக்கள் இங்குள்ள சுற்றுலாத்தலங்களையும் பார்க்க பெரிதும் விரும்புகின்றனர். எனவே தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் வேலூரில் ஒரு அலுவலகத்தை நிறுவி, இங்கிருந்து வேலூர், திருவண்ணாமலை,காஞ்சீபுரம், சென்னை, திருப்பதி, ஏலகிரி, ஏற்காடு, பெங்களூரு, மைசூரு ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு சொகுசு சுற்றுலா பஸ்களை இயக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் மென் மேலும் வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் வேலூர் மாவட்டமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்ச்சி அடையும். மேலும் பாதுகாப்பு காரணங்கள் கருதி வெளியூர் சுற்றுலா பயணிகள் தனியார் ஏஜெண்டுகளைவிட, அரசு சுற்றுலாத்துறையை அதிக நம்பிக்கையுடன் அணுகி அரசு சுற்றுலாத்துறை வாகனங்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். எனவே தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் வேலூர் மாநகர சுற்றுலா வாய்ப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமா?

அரிமா ஆர்.குப்புராஜ், வேலூர். 

மேலும் செய்திகள்