கண்காணிப்பு கேமராக்கள் சேதம்

Update: 2025-09-14 17:40 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுவர்களிலும், கம்பம் அமைத்தும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யாரோ மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, மேல் நோக்கி திருப்பி வைத்துள்ளனர். பள்ளி வளாகத்தில் நடக்கும் காட்சிகள் கேமராக்களில் பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமச்சந்திரன், வேலூர்.

மேலும் செய்திகள்