திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு அரசினர் மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியில் மாணவர்கள் பலர் தங்கி படிக்கின்றனர். அந்த விடுதியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்துள்ளது. அந்த வழியாக இரவில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. இடிந்த சுற்றுச்சுவரை சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, தச்சம்பட்டு.