திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கல்லேரிப்பட்டு ஊராட்சி தாங்கல் ஏரி சுடுகாட்டில் கடந்த சில மாதங்களாக டிராக்டர்களில் மண் எடுத்து கடத்தப்படுகிறது. மண் கடத்தலை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியில் திருட்டுத்தனமாக மண் எடுத்து கடத்துவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கல்லேரிப்பட்டு.