முழு நேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும்

Update: 2025-01-26 18:59 GMT

காட்பாடி தாலுகா செங்குட்டையில் வார்டு எண் 4-ல் அமுதம் ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் 1,800 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில், 800 குடும்ப அட்டைகளை பிரித்து செங்குட்டை பாங்க் நகர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை தொடங்கப்பட்டது. இதனால், ஏற்கனவே முழு நேர ரேஷன் கடை விற்பனையாளர் புதிதாக தொடங்கப்பட்ட ரேஷன் கடைக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒரே பயோ மெட்ரிக் எந்திரத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே செங்குட்டை ரேஷன் கடை வாரம் முழுவதும் செயல்பட முழுநேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும்.

-பி.துரை, செங்குட்டை காட்பாடி.

மேலும் செய்திகள்