நோயாளிகள், உதவியாளர்களுக்கு நிழற்கூட வசதி

Update: 2026-04-26 18:11 GMT

ராணிப்பேட்டையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய வசதி இல்லை. வெயில், மழைக் காலங்களில் ஒதுங்குவதற்கும், நிற்பதற்கும் போதிய இடவசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோயாளிகள், உதவியாளர்கள், பார்வையாளர்களுக்கு ஓய்வுக்கூடம் ஒன்றை அமைத்து, அங்கு மின் விசிறி, குடிநீர், செல்போன் சார்ஜ் போடும் வசதி போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும்.

-நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்