வேலூரில் உள்ள பல டீக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்பட்டு வந்த டீ தற்போது பாதியாக அளவு குறைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்படுகிறது. அந்த டம்ளரிலும் பாதி அளவே டீ வழங்கப்படுகிறது. இதுகுறித்து கடையினரிடம் கேட்டால் இவ்வளவு தான் வழங்க முடியும் என வீண் வாதம் பேசி சமாளிக்கின்றனர். பலர் அவமானமாக கருதி கேட்பதில்லை. எனவே வாடிக்கையாளர்களுக்கு டம்ளர்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டீ வழங்குவதை உறுதி செய்ய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த், தோட்டப்பாளையம்.