சோளிங்கர் ஒன்றியம் கரடிகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு, மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். அதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. அங்கும் பலர் படித்து வருகின்றனர். அந்தக் கட்டிடங்கள் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.