பழுதான புளியமரத்தை அகற்ற வேண்டும்

Update: 2024-11-10 20:03 GMT

அணைக்கட்டு தாலுகா கரடிகுடி அருகே பூஞ்சோலை கிராமத்தில் வேலூர், அணைக்கட்டு-ஒடுகத்தூர் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதன் அருகில் பழுதான புளியமரம் உள்ளது. மரத்தின் அடிப்பகுதி முழுவதும் பழுதாகி, கரையான் அரித்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத் துறையினர் பழுதான புளிய மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

-ஏகாம்பரம், கரடிகுடி.

மேலும் செய்திகள்