அரக்கோணம் தாலுகா அம்பரிசபுரம் கிராம ஏரியில் மதகுகள் பழுதடைந்துள்ளன. மேலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது. தற்போது பருவ மழைப் பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. ஏரியின் மதகுகள் சீரமைக்கப்படாததால் ஏரியில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊரக வளர்ச்சித் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகுகளை சீர் செய்ய வேண்டுகிறோம்.
-சங்கீதா, அம்பரிசபுரம்.