தேன் கூட்டை அகற்ற வேண்டும்

Update: 2022-07-21 13:18 GMT


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்துக்கும், சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அருகிலும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மரத்தில் மிகப்பெரிய அளவு தேன் கூடு உருவாகி உள்ளது. மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் தினமும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான பல்வேறு துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருப்பதினால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அந்த தேன் கூடை அப்புறப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்