வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் ஏரிக்கரையோரம் மதிநகர், அருப்புமேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான ரேஷன் கடை உள்ளது. அந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதான நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.ராமு, காட்பாடி.