மருத்துவமனைக்குள் மழைநீர் கசிவு

Update: 2022-11-16 17:30 GMT

வாணியம்பாடி மருத்துவமனையில் பெண்கள் வார்டு, அந்த வார்டுக்கு செல்லும் வழியில் மழைநீர் கசிவு ஏற்பட்டு சொட்டு சொட்டாக மழைநீர் விழுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அவர்களுடன் தங்கியிருக்கும் பார்வையாளர்களும் அவதிப்படுகின்றனர். மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் கசிவை சரி செய்ய வேண்டும்.

-பி.மோசஸ்ராபின், கோணாமேடு.

மேலும் செய்திகள்