ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது அங்குள்ள ரெயில் நிலையம் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரெயில்வே அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.