திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகம் 7 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்கள் எந்த மாடியில் உள்ளது என்ற போர்டு வைக்கப்படவில்லை. இதனால் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையை தேடி அவதிப்படும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் எந்தெந்த துறைகள் எங்கு உள்ளது என்ற போர்டு வைத்து பொதுமக்களின் அவதியை தடுக்க வேண்டும்.