அரக்கோணம் ஜோதி நகர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் நிழற்குடைகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. நிழற்குடைகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தடை விதிப்பார்களா?
-சுந்தரேசன், அரக்கோணம்.