அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்துக் கீழே போட்டு விட்டு, அங்கு மற்றொரு சுவரொட்டி ஒட்டுவதால் அந்த இடம் முழுவதும் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவரொட்டிகளை ஒட்டாதீர்கள் என எச்சரிக்கை செய்ய வேண்டும்.
-சாமுவேல், சமூக ஆர்வலர், அரக்கோணம்.