சரியாக பராமரிக்காத சுகாதார வளாகம்

Update: 2022-09-02 11:25 GMT

திருவண்ணாமலை நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் உள்ளது. அந்தச் சுகாதார வளாகம் சுத்தமாக இல்லை. சரியாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. யூரினல் தடுப்புகளும் உடைந்துள்ளன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்