பன்றி தொல்லை

Update: 2025-02-02 19:44 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ் காந்தி நகரில் ஆங்காங்கே ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. நாளுக்குநாள் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் சாலையின் குறுக்கே ஓடும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் கால்வாய், குப்பைகள் போன்றவற்றை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்னுசாமி, அப்துல்லாபுரம்.

மேலும் செய்திகள்