காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை குடோன் உள்ளது. அந்தக் குடோனில் இருந்து அரிசி வண்டுகள் பறந்து வீடுகளுக்குள் வருகின்றன. அது, குழந்தைகளின் காதுகளில் புகுந்து விடுகின்றன. வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீரில் விழுந்து விடுகின்றன. இந்த வண்டுகளால் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். அரிசி வண்டுகளால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை சிரமப்படுகின்றனர். எனவே வண்டுகளை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.சதீஷ்குமார், சேவூர்.