பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2023-04-16 16:51 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். மாமண்டூர், கரிவேடு, ஆயர்பாடி, வேகாமங்கலம், சிறுகரும்பூர், தருமநீதி, பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை, கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்ல இங்கு வந்தால் நிழற்குடை இல்லாமல் மழையிலும் வெயிலிலும் காத்திருந்து பயணம் செய்கிறார்கள். எனவே சென்னை-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து ஓச்சேரியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமநாதன், ஓச்சேரி.

மேலும் செய்திகள்