கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நயம்பாடி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், மனு கொடுத்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அந்தப் பயணிகள் நிழற்குடையில் இரவில் மதுபானம் குடிக்கிறார்கள். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பதால், மறுநாள் காலை பள்ளி மாணவர்கள், பயனாளிகள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது பீங்கான் கால்களில் குத்தி விடுகின்றன. பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமாா், கலசபாக்கம்.