வேலூர்-ஆற்காடு சாலையில் கிரவுன் தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு, பயணிகள் நிழற்கூடம் இருந்தது. இதை இடித்து விட்டார்கள். ஆனால், அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வில்லை. மழை, வெயிலில் பள்ளி மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. அங்கு, புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கார்த்திகேயன், வேலூர்.