சீக்கராஜபுரம் ஹவுசிங் போர்டு பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடம் சிதிலமடைந்துள்ளது. தரைதளம், சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தத்துக்கு பின் பக்கம் குளம் உள்ளதால் அந்த நிழற்கூடம் எந்த நேரத்திலும் சரிந்து குளத்தில் விழும் அபாயம் உள்ளது. பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுத்து பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
-பயணிகள், சீக்கராஜபுரம்.