திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நரியாபட்டு. இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டு, அதில் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நூலகம் கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் சேதமான நிலையில் காணப்படுகிறது. இந்த நூலகம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டு வருகிறது. கட்டிடத்தை சீரமைத்து நூலத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, நரியாபட்டு.