இடிந்துவிழும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

Update: 2022-09-27 06:09 GMT



வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முற்றிலும் சேதுமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூறையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. வருவாய் ஆய்வாளர் பணியில் இருக்கும்போது சிமெண்டு பூச்சுகள் கீழே விழுவதால் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.


மேலும் செய்திகள்