வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் மோட்டார்சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதுஇல்லை. இதை பயன்படுத்தி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப் போகிறது. செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மோட்டார்சைக்கிள் திருட்டை தடுக்க வேண்டும்.
சுந்தரராஜன், அடுக்கம்பாைற