பொம்மசமுத்திரம் ஏரிக்குள் பழங்கால திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து மீன்களும் காணப்பட்டு வருகிறது. அந்த மீன்களை பிடிப்பதற்காக கிணற்றின் சுற்றுச்சுவர் மீது ஏறி நின்று இளைஞர்கள் சிலர் அவ்வப்போது மீன்பிடித்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் அங்கு மீன்பிடிக்கும் செயலை தவிர்க்க அந்த கிணற்றுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கலாமே!